உலகம்

தென்கொரியாவில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்பாடுகள் தீவிரம்

21st Aug 2020 04:32 PM

ADVERTISEMENT

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தென்கொரியாவிலும் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தென்கொரியாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தற்போது சில நாட்களாக நாள்தோறும் 300க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

வெள்ளிக்கிழமையான இன்று புதிதாக 367 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 315 பேர் உள்நாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 16,670-ஆக அதிகரித்துள்ளதாக தென்கொரியாவின் தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 8 நாட்களில் 1,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Tags : South Korea
ADVERTISEMENT
ADVERTISEMENT