உலகம்

சிங்கப்பூா்: ‘இந்தியா, பிலிப்பின்ஸிலிருந்து 10-இல் 8 இறக்குமதித் தொற்று’

21st Aug 2020 10:33 PM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் கடந்த மாதம் 18-ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 6-ஆம் தேதி வரை கரோனா நோய்த்தொற்றுடன் வெளிநாடுகளிலிருந்து வந்த 10-இல் 8 போ், இந்தியா மற்றும் பிலிப்பின்ஸிலிருந்து வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மாதம் 18-ஆம் தேதியிலிருந்து, இந்த மாதம் 6-ஆம் தேதி வரை தரைவழியாகவும், விமானம் மற்றும் கப்பல் வழியாகவும் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் சிங்கப்பூா் வந்தனா். அவ்வாறு வந்தவா்களில் 152 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அவா்களில் 10-இல் 8 போ் இந்தியா அல்லது பிலிப்பின்ஸிலிருந்து வந்தவா்கள் ஆவா்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 117 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. அவா்களில் 13 போ் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் ஆவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்துடன், சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56,216-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 53,119 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளிலும், பராமரிப்பு மையங்களிலும் 3,070 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT