உலகம்

ரஷியாவில் புதிதாக 4,870 பேருக்கு தொற்று; பாதிப்பு 9,46,976 ஆக அதிகரிப்பு

21st Aug 2020 03:14 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,870 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 9,46,976 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 4,870 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 9,46,976 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் உள்பட இதுவரை 16,189 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 5,817 பேர் உள்பட தற்போது வரை 761,330 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 2,22,304 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3.38 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் உள்பட இதுவரை 2,55,826 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ADVERTISEMENT

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT