உலகம்

புதிய அவதாரம் எடுக்கும் பணம்: உலகின் இன்னொரு புரட்சி டிஜிட்டல் கரன்சி! 

21st Aug 2020 04:22 PM

ADVERTISEMENT

 

உலகம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மிகப்பெரிய மாற்றங்களையும் வளர்ச்சியையும் சந்தித்து வருகிறது.

அந்த வகையில் இந்த நூற்றாண்டி மிகப்பெரிய மாற்றம் என்று பார்க்கப்போனால் தொழில்நுட்ப வளர்ச்சி, தொலை தொடர்பு வசதி, இணையப் பயன்பாடு ஆகியவற்றை குறிப்பிடலாம். இப்போது செல்போன் பயன்பாடும் இணைய தேவையும் அதிகரித்திருப்பதால் பெரும்பாலா பணிகள் இலகுவாகி இருக்கின்றன. காலை உணவு தொடங்கி கல்வி, அலுவலகப் பணி, வங்கி சேவைகள் என அனைத்தையுமே நாம் செல்போனைக் கொண்டே நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இணையத்தோடு இணையமாக நமது வாழ்க்கை வலைப்பின்னலுக்குள் இணைந்து விட்ட ஒன்றாகிவிட்டது. 

இந்த சூழ்நிலையில் இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக சீனா அறிவித்திருப்பதுதான் பைலட் திட்டம். சீனாவின் மத்திய வங்கி அறிவித்துள்ள இந்த புதிய டிஜிட்டல் கரன்சி திட்டம், சீனாவில் பல பெரிய நகரங்களில் முதல் மின்னணு கட்டண நடைமுறைக்கு வழிவகுக்க உள்ளது. 

ADVERTISEMENT

2018 ஆம் ஆண்டில், சீனாவில் 83 சதவீத பணம் மொபைல் சாதனங்கள் மூலமாகவும், 17 சதவீதம் மொபைல் அல்லாமல், அதாவது நேரடி பணம் மற்றும் வங்கி அட்டைகள் மூலமாக கையாளப்பட்டுள்ளது என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் பெரும்பகுதி ஏற்கனவே வெச்சாட் மற்றும் அலிபே போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனைன் செய்யப்படும் நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் நாணய மின்னணு கட்டணம்  உண்மையான பணமில்லா சமூகத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.

இதன் நன்மை என்னவென்றால், தற்போது நாம் செல்போன் செயலிகள் மூலம் செய்யும் பணப்பரிவர்த்தனைகளுக்கு இணையம் அவசியமாகிறது. ஆனால் இந்த டிஜிட்டல் நாணய மின்னணு கட்டண சேவைக்கு இணையம் தேவை இல்லை. எனவே இந்த சேவையானது சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும் அதேசமயத்தில் விமானப் பயணம் போன்ற இணையத் தடை ஏற்படுகின்ற சூழல்களிலும் பணம் பற்றிய அச்சம் இல்லாமல் எல்லோரும் இந்த சேவையை பயன்படுத்த முடியும். 

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் மூன்று முதல் ஐந்து மாத காலம் பரிசாட்த்த முறையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தற்போது நான்கு நகரங்களில் இது சோதனைக்கு உட்பட்டுள்ளது: வடக்கு சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் சியோங்அன் புதிய பகுதி, தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்சென், கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சுஜோ மற்றும் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் செங்டு. பெய்ஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது பரிசோதிக்கப்படும், மேலும் இது பிற பிராந்தியங்களுக்கும் முறையாக விரிவுபடுத்தப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் இதன் கொள்கை வடிவமைப்பை 2020 க்குள் முடிக்க வேண்டும் என்று சீனாவின் மத்திய வங்கி கூறியுள்ளது.. 

மேலும் நாட்டின் நாணய மதிப்பை நிலையானதாக வைத்திருப்பது, பொருளாதார வளர்ச்சி சீராக கொண்டு செல்வது,  வேலைவாய்ப்பை அதிகரிப்பது நிதி அமைப்பை நிலையானதாக வைத்திருப்பது. ஆகிய நான்கு முக்கிய நோக்கங்களை இந்த புதிய நாணயக் கொள்கை கொண்டிருப்பதாகவும் டிஜிட்டல் நாணயம் சீனாவின் நிதி அமைப்பை "மிகவும் நிலையானதாகவும், சீரானதாகவும் மாற்றும் என்றும் நம்பப்படுகிறது. அரசு நடைமுறைக்கு கொண்டுவரும் இந்த டிஜிட்டல் கட்டண முறையின் மூலம், பணமோசடி, சூதாட்டம் மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி வழங்குதல் ஆகியவற்றை தடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT