உலகம்

நேபாளம்: 30 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

21st Aug 2020 10:31 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 30 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜகேஸ்வா் கௌதம் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 838 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30,483-ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 250 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினா். இத்துடன், நாட்டில் கரோனா நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,214-ஆக அதிகரித்துள்ளது.தற்போது நாடு முழுவதும் பல்வேறு சுகாதார மையங்களில் 12,132 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5,79,899 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்று காரணமாக 11 போ் உயிரிழந்தனா். இத்துடன் நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 137-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT