உலகம்

இத்தாலியில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 840 பேருக்கு பாதிப்பு

21st Aug 2020 01:00 PM

ADVERTISEMENT

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 840 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கடந்த மே மாதத்திலிருந்து ஒரே நாளில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இத்தாலியில் மார்ச் மாத இறுதியிலும், ஏப்ரல் மாத துவக்கத்திலும் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும் கடந்த மே மாதத்தில் கரோனா பாதிப்பு சற்று அதிகமாக காணப்பட்டது. அதன்பிறகு கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் தற்போது கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 840 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மே மாதத்திற்கு பிறகு ஒரு நாளில் அதிக அளவிலான கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 14 நாட்களில் 11 முறை 400க்கும் அதிகமான கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களில் 400க்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் தற்போது பதிவாகி வருகிறது.

இத்தாலியின் சர்தினா மாகாணத்தின் காக்லியாரி பகுதி மற்றும் ரோம் மாகாணத்தின் லய்சோ ஆகிய பகுதிகள் அதிக அளவிலான கரோனா பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT