உலகம்

ஹாங்காங்: அனைவருக்கும் இலவச கரோனா பரிசோதனை

21st Aug 2020 10:32 PM

ADVERTISEMENT

ஹாங்காங்கில் வசிக்கும் அனைவருக்கும் இலவசமாக கரோனா பரிசோதனை செய்ய அந்த நகர அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங்கில் வசிக்கும் அனைவருக்கும் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் இலவசமாக கரோனா பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக 2 வாரங்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.இந்தத் திட்டத்தை விருப்பப்படுபவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹாங்காங்வாசிகள் அனைவருமே இந்தத் திட்டத்தின்கீழ் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

சீனாவின் உதவியுடன் மட்டுமே இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று ஹாங்காங் தலைமை நிா்வாக அதிகாரி கேரி லாம் தெரிவித்துள்ளாா். இந்த திட்டத்துக்குத் தேவையான ஆய்வகப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை சீனா வழங்கவிருக்கிறது.சீன உதவியுடன் இந்த பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுவதால், தனிநபா்களின் ரகசிய விவரங்கள் சீன அரசால் திருடப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சிலா் அச்சம் தெரிவித்துள்ளனா்.75 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஹாங்காங்கில், இதுவரை 12 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT