உலகம்

உலகம் முழுவதும் 2.28 கோடி பேருக்கு தொற்று; பலி எண்ணிக்கை 7.96 லட்சமாக உயர்வு

21st Aug 2020 07:46 AM

ADVERTISEMENT

 

ஜெனீவா: உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2,28,56,134 கோடியாக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 6,554 பேர் பலியானதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 7,96,992 க்கும் அதிகரித்துள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, புதிதாக 2,63,000 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,28,56,134 கோடியைக் கடந்தது.  

அமெரிக்காவில் 57,46,272     பேரும், பிரேஸிலில் 35,05,097 பேரும், ரஷியாவில் 9,42,106 பேரும், தென்னாப்பிரிக்காவில் 5,99,940 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை இந்தியா 29,04,329  இரண்டாவது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 6,554 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கரோனா தொற்று உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,96,992 -ஆக இருந்தது. இதுவரை அமெரிக்காவில் 1,77,424 பேரும், பிரேஸிலில் 112,423 பேரும், மெக்ஸிகோவில் 59,106 பேரும், இந்தியாவில் 54,975    பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,55,11,669 ஆகவும், 65,47,473    பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61,838 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.     

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT