உலகம்

அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எண்முறைப் பொருளாதாரம்

21st Aug 2020 03:46 PM

ADVERTISEMENT

 

சீனாவில் புதிய ரக கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட பிறகு, உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வரும் ஊழியர்களுக்கான வேலை பாதிக்கப்பட்டவில்லை மாறாக, இந்த வேலையின் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது.

எண்ணியல் தொழில் நுட்பமும் உண்மையான பொருளாதாரமும் ஆழ்ந்த முறையில் ஒருங்கிணைந்து வளர்ந்து வரும் நிலையில், பல புதிய தொழில்களும் புதிய வணி மாதிரிகளும் தோன்றியுள்ளன. அதோடு, பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சீனாவில் தற்போது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வலுவான ஆதரமாக, எண்முறைப் பொருளாதாரம் மாறியுள்ளது.

2019ஆம் ஆண்டு எண்முறைப் பொருளாதாரம்,  ஜி.டி.பி அதிகரிப்பில் 67.7 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கியது. 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு, அதிகார வட்டாரம் வெளியிட்ட அறிக்கைகளில்,  38 புதிய தொழில்களில் பாதியளவிற்கும்  மேல் எண்முறைப் பொருளாதாரத்துடன் தொடர்பு உடையவை.

ADVERTISEMENT

2035ஆம் ஆண்டு, சீனாவில் எண்முறைப் பொருளாதார மதிப்பு, 16லட்சம் கோடி அமெரிக்க டாலரை  எட்டும். இதனால், 41.5 கோடி புதிய வேலை வாய்ப்புகள்  உருவாக்கப்படும் என்று அமெரிக்காவின் பாஸ்டன் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

Tags : சீனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT