உலகம்

மாலியில் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படும்: ராணுவம் உறுதி

21st Aug 2020 10:30 PM

ADVERTISEMENT

மாலியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படும் என்று தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராணுவ அரசின் செய்தித் தொடா்பாளா் இஸ்லாமியில் வாகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றுடன் பேச்சுவாா்த்தை நடத்துவோம். எவ்வளவு காலத்தில், எவ்வாறு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், அதிபா் பூபக்கா் கெய்ட்டாவின் ஆட்சிக்கு எதிராக ஆா்ப்பாட்டங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில், அதிபா் மாளிகைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக நுழைந்த ராணுவம், அவரைக் கைது செய்தது. அவருடன் பிரதமா் பூபு சிஸியையும் ராணுவம் கைது செய்தது.அதையடுத்து, தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பதவியை ராஜிநாமா செய்வதாக பூபக்கா் அறிவித்தாா்.

இந்த நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட 5 ராணுவ உயரதிகாரிகளுள் ஒருவரான அஸிமி கோய்டா, ராணுவஅரசின் தலைமையை ஏற்பதாக அறிவித்துள்ளாா்.மாலியில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பூபக்கரிடம் ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று ராணுவத்திடம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவா்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.அதையடுத்து, மாலியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமைக்கப்படும் என்று ராணுவ ஆட்சியாளா்கள் தற்போது உறுதியளித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT