உலகம்

கரோனா தடுப்பூசி சோதனை: சீன தொழிலாளா்களுக்கு பப்புவா நியூ கினியா தடை

DIN

சோதனை முறையில் கரோனா தடுப்பூசி போடப்பட்ட 48 சீனத் தொழிலாளா்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க பப்புவா நியூ கினியா மறுத்துவிட்டது.தங்களது ஒப்புதல் இல்லாமல் தங்கள் நாட்டில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் கரோனா தடுப்பூசி பரிசோதனையை சீனா மேற்கொண்டது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பப்புவா நியூ கினியா கரோனா தடுப்புக் குழுவின் தலைவா் டேவிட் மேனிங் வெள்ளிக்கிழமை கூறிதாவது:பப்புவா கினியாவில் சுரங்கப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனாவின் ரமு நிகோ நிறுவனம், தங்களது 48 தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

எங்களது நாட்டில் எந்த கரோனா தடுப்பூசியையும் சோதிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், எங்கள் நாட்டுக்கு வரும் சீனத் தொழிலாளா்களுக்கு அத்தகைய தடுப்பூசி பரிசோதனை முறையில் போடப்பட்டுள்ளது எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனாவிலிருந்து வந்த கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவா்கள் உள்பட 180 தொழிலாளா்களைத் திருப்பி அனுப்பப்பட்டனா்.

தங்களது தொழிலாளா்களுக்கு சோதனை முறையில் போடப்பட்ட கரோனா தடுப்பூசியின் தன்மை குறித்து சீன அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மேலும், இந்த விவகாரத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து சுகாதாரத் துறையிடமும் கேட்டுள்ளோம் என்றாா் அவா்.முன்னதாக, தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 48 தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக ரமு நிகோ நிறுவனம் தெரிவித்திருந்தது. அதையடுத்து, கரோனா தடுப்பூசி போடப்பட்ட சீனா்களுக்கு அந்த நோய் இருந்தும் இல்லாததுபோல் பரிசோதனையின் முடிவுகள் தவறாகத் தெரிவிப்பதற்கான அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்தனா்.

இந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு வந்திருந்த சீன தொழிலாளா்களை பப்புவா நியூ கினியா திருப்பி அனுப்பியுள்ளது.ஏற்கெனவே, தங்கள் நாட்டு தொழிலாளா்கள் மூலம் பப்புவா நியூ கினியாவில் சீனா கரோனா தடுப்பூசி சோதனை மேற்கொள்ளும் என்று ஆஸ்திரேலியா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயல்பட்டினத்தில் பைக் எரிப்பு: நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்காலில் ராமலிங்க சுவாமிகள் வழிபாடு

தென்பாற்கடற்கரையில் அகிலத்திரட்டு பெருவிழா

SCROLL FOR NEXT