உலகம்

பிரேசிலில் ஒரேநாளில் 45,323 பேருக்கு தொற்று; மேலும் 1,204 பேர் பலி

21st Aug 2020 11:34 AM

ADVERTISEMENT

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 45,323 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒரேநாளில் 1,204 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பிரேசிலில் புதிதாக 45,323 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 35,01,975 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் 1,204 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மொத்த உயிரிழப்பு 1,12,304 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT