உலகம்

ஆஸ்திரேலியா: வெளிநாட்டுப் பயணிகளுக்கான உச்சவரம்பு தொடரும்

21st Aug 2020 10:34 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஆஸ்திரோலியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை உச்சரவரம்பு அதிகரிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதுகுறித்து பிரதமா் ஸ்காட் மோரிஸன் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயத்தைத் தவிா்ப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 4 ஆயிரத்தை மிக்க கூடாது என்று தற்போதுள்ள கட்டுப்பாட்டைத் தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எனவே, அந்த உச்சவரம்பு தளா்த்தப்படாது. இன்னும் இரு வாரங்கள் கழித்து இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும். அப்போது, வாரந்தோறும் அனுமதிக்கப்படும் வெளிநாட்டுப் பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று நம்புகிறேன்.

வெளிநாடுகளுக்குச் சென்று, திரும்ப வர முடியாத நிலையிலுள்ள ஆஸ்திரேலியா்களை திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொல்ளப்படும் என்றாா் அவா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் 24,762 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 331 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 730 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT