உலகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஷென்சென் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் அடித்தளம்! 

20th Aug 2020 04:54 PM

ADVERTISEMENT

 

ஷென்சென் நகரம் சீனாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக உருவாக்கப்பட்டு இம்மாதத்துடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுவதன் மூலம் அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வர்த்தக தொடர்பை விரிவடைய செய்வதோடு, தொழில் மேம்பாடு, நாட்டின் செழுமை மக்களின் வளம் எல்லாம் பெருகும். அந்தவகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நகரம் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பிற பிராந்தியங்களுக்கும் பொருளாதார மண்டலமாக மாற்றியுள்ளது என்றால் அது மிகையில்லை. 

சீனாவில் தேசிய அளவிலான பொருளாதார மண்டலங்கள் குறைந்தது 15 வகைகள் உள்ளன. ஒரு பொருளாதார மண்டலத்தின் முதலீட்டைக் கருத்தில் கொள்ளும்போது, தனித்துவமான மண்டல வகைகள் வழங்கும் சலுகைகளில் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. 15 பொருளாதார மண்டலங்களை ஏழு வகைகளாகப் பிரிக்கலாம், 

  1. குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கான மண்டலங்கள்;

    ADVERTISEMENT

  2. உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியை வணிகமயமாக்குவதற்கான மண்டலங்கள்;

  3. வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கான மண்டலங்கள்;

  4. எல்லை தாண்டிய மின் வணிகம் வணிகத்திற்கான மண்டலங்கள்;

  5. குறிப்பிட்ட நோக்கங்களுக்காக முதலீட்டை ஈர்க்கும் மண்டலங்கள்;

  6. குறிப்பிட்ட நாடுகளுடன் ஒத்துழைப்புக்கான மண்டலங்கள்; 

  7. புதிய பகுதிகள்.

இதைத்தாண்டி சீனாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று குறிப்பிடப்படும் ஷென்சென் சிறப்பு பொருளாதார மண்டலம் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான அடித்தளமாக இருந்து வருகிறது. 

1970 களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த சீன சிறப்பு பொருளாதார மண்டலங்கள். சந்தை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இருப்பதோடு சீனாவை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தும் ஒரு காரணியாகவும் உள்ளன.  எனவே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெரும்பாலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன, குறிப்பாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு அருகிலேயே உள்ளன.

சீன சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வெற்றி நாட்டின் பிற பகுதிகளில் எவ்வாறு முன்னேறலாம் என்பதற்கான ஒரு வரைபடத்தை வழங்கியதுடன், சீனாவின் மகத்தான வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பங்களித்தது. சில பிராந்தியங்களில், தொழில்துறை பூங்காக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% முதல் 80 அல்லது 90 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளன. 

சீன சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சீன வணிகத்திற்கான வெளிநாட்டு வணிகங்களின் அணுகலை தெளிவாக உயர்த்தியதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி சலுகைகள்-குறைக்கப்பட்ட வருமான வரி நிலை போன்றவை-மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு தனித்துவமான விதிமுறைகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான நன்மைகளை வழங்கின.

பொதுவாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் புதிய வணிகங்களுக்கான ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குவதற்கும், வரிகளையும் கட்டணங்களையும் குறைப்பதற்கும், சந்தைக்கு அதிக ஊக்கமளிப்பதற்கும் ஐந்தாண்டு கால முயற்சியைப் பின்பற்றுகிறது. 2017 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் ஒரு நாளைக்கு 16,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த எண்ணிக்கை 6,900 ஆக இருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உண்மையில், ஷென்சென் சிறப்பு பொருளாதர மண்டலங்கள் வழங்கும் பெருநிறுவன சலுகைகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சந்தை சார்ந்த கொள்கைகளுக்கும், ஷென்சென் போன்ற பெருநகரங்களின் சமீபத்திய வெற்றிக்கும் பெரும் பலமாக இருந்துள்ளது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT