உலகம்

உலகம் முழுவதும் ஜிமெயில், கூகுள் டிரைவ் பயன்பாட்டில் சிக்கல்

20th Aug 2020 12:46 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் ஜிமெயில், கூகுள் டிரைவ் பயன்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

கூகுளின் பல்வேறு சேவைகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சில மணி நேரங்களாக ஜிமெயிலில் இணைப்புகளை அனுப்பும்போது பல சிக்கலை எதிர்கொள்வதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கூகுள் ஆப்ஸ் பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து சேவையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஜிமெயில் சேவை முடங்கியது குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கூகுள் மீட், கூகுள் வாய்ஸ் மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஜிமெயில் சேவை முடங்கியது குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களில்  #gmaildown என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

Tags : google
ADVERTISEMENT
ADVERTISEMENT