உலகம்

ஆஸ்திரேலியா: கரோனா தடுப்பூசி உற்பத்தி: நிறுவனத்துடன் ஒப்பந்தம்

20th Aug 2020 07:35 AM

ADVERTISEMENT

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்ய, பிரிட்டன்-ஸ்வீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஸெனெக்குடன் ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து பிரதமா் ஸ்காட் மோரிஸன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கரோனா தடுப்பூசியை ஆஸ்திரேலியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அஸ்ட்ராஸெனெக்குடன் மேற்கொண்டுள்ளோம்.இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆஸ்திரேலியா மக்கள் அனைவருக்கும் அந்தத் தடுப்பூசி இலவசமாகக் கிடைப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி 3-ஆம் கட்ட சோதனை நிலையில் உள்ளது. எனவே, அதன் செயல்திறனை நிரூபிப்பதற்கு இன்னும் சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.அந்த மருந்து அனைத்து கட்ட சோதனைகளிலும் வெற்றியடைந்தால், அதனை 2.5 ஆஸ்திரேலியா்களுக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதற்கான உற்பத்திப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றாா் அவா்.புதன்கிழமை நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் 24,084 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 729 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT