ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,510 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 2,26,914 ஆக அதிகரித்துள்ளது.
தொடக்கத்தில் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த ஜெர்மனியில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,510 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,26,914 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பலியானோர் எண்ணிக்கை 9,243 ஆக உள்ளது. அதேநேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 20 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் பாதிப்பு 6,000 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த மே மாதம் மாதத்தில் இருந்து கணக்கிடுகையில் இன்றைய பாதிப்பு எண்ணிக்கையே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.