உலகம்

நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி, 38 பேர் மாயம்

14th Aug 2020 06:09 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.

நேபாள நாட்டின் சிந்துபல்சோக் மாவட்டத்தில் இன்று அதிகாலை மழை பெய்தது. மழையைத்தொடர்ந்து அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் புதைந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். 38 பேர் மாயமானார்கள். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Tags : landslide
ADVERTISEMENT
ADVERTISEMENT