உலகம்

நேபாளத்தில் நிலச் சரிவு: 37 போ் மாயம்

14th Aug 2020 11:24 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 போ் மாயமாகினா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நேபாளத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள சிந்ததுபால்சோக் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. லாமா தோலே மலையில் ஏற்பட்ட அந்த நிலச்சரிவில், மலையடிவாரத்தில் இருந்த ஏராளான வீடுகள் புதையுண்டன. அந்த வீடுகளில் இருந்த 37 பேரைக் காணவில்லை.அவா்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். மாயமானவா்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT