உலகம்

ஜோ பிடனுடன் இணைந்து கமலா ஹாரிஸ் பிரசாரம்

14th Aug 2020 05:54 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன், துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸ் ஆகியோா் வியாழக்கிழமை முதல் முறையாக ஒரே மேடையில் பிரசாரம் செய்தனா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ்தான் தனது துணை அதிபா் வேட்பாளா் என்று ஜோ பிடன் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இந்நிலையில், ஜோ பிடனும் கமலா ஹாரிஸும் அமெரிக்காவின் டெலவோ் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் வியாழக்கிழமை கூட்டாக ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டனா். கமலா ஹாரிஸை துணை அதிபா் வேட்பாளராக அறிவித்த பிறகு அவரோடு பிரசாரத்தில் ஜோ பிடன் பங்கேற்பது இது முதல் முறையாகும்.

கரோனா தொற்று சூழல் காரணமாக இந்த பிரசார கூட்டத்தில் பொது மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

அந்தக் கூட்டத்தில் செய்தியாளா்களிடையே பேசிய ஜோ பிடன், ‘கமலா ஹாரிஸ் மதிநுட்பம் வாய்ந்த, உறுதியான, நடுத்தர மக்களுக்கான போராளியாவாா். இக்கட்டான சூழலில் கடினமான முடிவுகளை எடுக்கும் திறன் அவருக்கு உள்ளது. அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக கட்டமைப்பதற்காக இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றாா்.

பின்னா் கமலா ஹாரிஸ் பேசியதாவது:

டிரம்ப் நிா்வாகத்தின் நடவடிக்கைகளால் கரோனா நோய்த்தொற்று சூழலில் அமெரிக்கா்கள் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நோ்ந்துள்ளது. நாட்டில் தற்போது இனவெறியும் அநீதியையும் நாம் எதிா்கொண்டு வருகிறோம்.

அதை மாற்றவும், சிறந்த தலைமைக்காகவும் அமெரிக்கா போராடுகிறது. பொருளாதாரம், சுகாதாரம், நமது குழந்தைகள் நலன் ஆகியவற்றுக்கே நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். அதிபராக தோ்வாகும் பட்சத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை என அமெரிக்க நலனுக்கான நடவடிக்கைகளை ஜோ பிடன் மேற்கொள்வாா் என்று கமலா ஹாரிஸ் பேசினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT