உலகம்

அன்னிய முதலீட்டை ஈர்க்கும் சீனா

14th Aug 2020 06:21 PM

ADVERTISEMENT

 

அன்னிய வர்த்தகத்தையும் அன்னிய முதலீட்டையும் நிதானப்படுத்துவது பற்றிய பணி வழிக்காட்டல் ஆவணம் ஒன்றைச் சீன அரசவையின் அலுவலகம் அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணத்தில் வரி வசூலிப்புக் கொள்கையை மேம்படுத்துவது, வர்த்தகத்தின் புதிய வழிமுறையை வளர்ப்பது, எல்லை கடந்த சரக்குப்போக்குவரத்து மற்றும் மனிதப் பரிமாற்றத்தின் வசதிமயமாக்கத்தை வலுப்படுத்துவது, முக்கிய தொழிற்துறைக்கும் முக்கிய தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவு அளிப்பது ஆகிய துறைகள் சார்ந்து 15 கொள்கைகள் வெளயிடப்பட்டுள்ளன. இந்த கொள்கைகள், அன்னியத் தொழில் நிறுவனங்களையும் தொழிற்துறை சங்கிலியையும் வினியோக சங்கிலியையும் நிதானப்படுத்தும்.

புதிய ரக கரோனா வைரஸின் பரவல், உலக பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பரவலின் தொடக்கத்தில் சில பொருட்களின் வினியோக சங்கிலியில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டன. இது, சில நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கவலையை ஏற்படுத்தியது. இதனால், வெளிநாடுகளில் நிர்வாகம் செய்யும் சொந்த நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தொழில் கட்டமைப்பைச் சீர்படுத்துவதற்கு ஊக்கமளிப்பது தொடர்பான கொள்கைகளை அந்நாடுகள் வெளியிட்டன.

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டு முதல் 7 திங்களில், சீனா பயன்படுத்தியுள்ள அன்னிய முதலீட்டுத் தொகை 53 ஆயிரத்து 565 கோடி யுவானாகும். இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.5 விழுக்காடு அதிகம். ஜுலை திங்களில் மட்டும், இத்தொகை 6347 கோடி யுவானாக உயர்ந்துள்ளது. இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

சீனப் பொருளாதாரத்தின் நிலைமை நிதானமாகவுள்ளது. அதோடு சீனப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையும், சீனாவின் மிகப் பெரிய சந்தை அளவும் மாறவில்லை. இதனால், வெளிநாட்டு திறப்பு பணியை விரிவுப்படுத்தி வணிக சூழலை மேம்படுத்தும் சீனாவின் நோக்கமும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT