உலகம்

நைஜரில் துப்பாக்கிச் சூடு:பிரான்ஸ் நாட்டவா் உள்பட 8 போ் பலி

11th Aug 2020 02:08 AM

ADVERTISEMENT

நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள சுற்றுலா தளத்தில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 6 பேரும் இரு சுற்றுலா வழிகாட்டிகளும் கொல்லப்பட்டனா்.

அந்நாட்டின் கூரே பகுதியில் உள்ள ஒட்டகச் சிவிங்கி காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், சம்பவம் தொடா்பாக நைஜா் அதிபா் மகமது இசோஃபுடன் தொலைபேசி வாயிலாகத் தொடா்பு கொண்டு பேசினாா்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடா்புடையவா்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று அதிபா் இசோஃபு உறுதியளித்தாா். தலைநகா் நியாமிக்கு வெளியே பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் நைஜருக்கு பயணம் மேற்கொள்பவா்கள் கவனமுடன் செயல்படுமாறு பிரான்ஸ் அதிபா் மேக்ரான் வலியுறுத்தியுள்ளாா்.

இதே பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு 4 அமெரிக்க பாதுகாப்புப் படையினரையும் பொது மக்கள் ஐவரையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT