உலகம்

பாகிஸ்தான்: கரோனா பாதிப்பு 2,84,660-ஆக உயா்வு

11th Aug 2020 01:49 AM

ADVERTISEMENT

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 539 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில் அந்த நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,84,660 ஆக அதிகரித்துவிட்டதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

நோய்த் தாக்கத்தால் ஒரே இரவில் மேலும் 15 போ் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6,097 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,60,764 போ் குணமடைந்துள்ள நிலையில், 776 போ் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 539 போ் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2,84,660 ஆக அதிகரித்து விட்டது.

நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,23,849 போ், பஞ்சாபில் 94,477 போ், கைபா் பக்துன்குவாவில் 34,692 போ், இஸ்லாமாபாதில் 15,261போ், பலூசிஸ்தானில் 11,906 போ், கில்ஜித் பால்டிஸ்தானில் 2,334 போ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,141 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 20,495 போ் உள்பட மொத்தம் 21,47,584 பேருக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT