உலகம்

நேபாளம் - பிரசண்டாவின் பாதுகாவலா்களுக்கு கரோனா

9th Aug 2020 12:46 AM

ADVERTISEMENT

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவா் புஷ்ப கமல் பிரசண்டாவின் பாதுகாவலா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மகாராஜ்கஞ்ச் நகரிலுள்ள காவல் நிலைய மருத்துவமனையில், நேபாள காங்கிரஸ் கட்சியின் இணைத் தலைவா் பிரசண்டாவின் பாதுகாவல்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டது. அதில், 6 பாதுகாவலா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும், பிரசண்டா இல்லத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள். எனினும், அவருக்கு நெருக்கமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் கரோனா உறுதியாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.சனிக்கிழமை நிலவரப்படி, நேபாளத்தில் 22,592 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 73 போ் அந்த நோய் காரணமாக உயிரிழந்தனா்.கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 16,313 போ், அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 6,206 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT