உலகம்

சோமாலியா ராணுவத் தளத்தில் வெடிவிபத்து: 8 பேர் பலி

9th Aug 2020 12:36 PM

ADVERTISEMENT

சோமாலியா நாட்டின் ராணுவத் தளத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ராணுவ வீரர்கள் 8 பேர் பலியாகிய சம்பவம் நடந்துள்ளது.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாடிஷுவில் உள்ள இராணுவத் தளத்தின்  வாயிலில் சனிக்கிழமை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ராணுவ முகாமைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த நபர் ராணுவத் தளத்தின் வாயில்முன் நிறுத்தி விட்டு சென்றுவிட்டார். நிலைமையை உணர்வதற்குள் குண்டுவெடித்ததில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
 

Tags : Somalia
ADVERTISEMENT
ADVERTISEMENT