உலகம்

உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்வு

6th Aug 2020 10:23 AM

ADVERTISEMENT


உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,89,77,637 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 7,11,220 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகம் முழுவதும் 213 நாடுகளுக்கு மேல் பரவி முடக்கிப்போட்டுள்ளது. உலக அளவில் கரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது. 

உலக அளவில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,158 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 18,977,637-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 933 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  7,11,220 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1,21,66,746 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 60,99,671    போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 65,543 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரேசில் 2,859,073 தொற்று பாதிப்பு மற்றும் 97,256 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கரோனா தொற்று பாதிப்பை பொறுத்தவரை, இந்தியா மூன்றாவது இடத்தில் (1,908,254) உள்ளது, ரஷ்யா (864,948), தென்னாப்பிரிக்கா (529,877), மெக்ஸிகோ (456,100), பெரு (439,890), சிலி (364,723), கொலம்பியா (334,979), ஈரான் (317,483) ), இங்கிலாந்து (307,258), ஸ்பெயின் (305,767), சவுதி அரேபியா (282,824), பாகிஸ்தான் (281,136), இத்தாலி (248,803), பங்களாதேஷ் (246,674), துருக்கி (236,112), பிரான்ஸ் (228,576), அர்ஜென்டினா (220,682), ஜெர்மனி (214,113), ஈராக் (137,556), கனடா (120,033), இந்தோனேசியா (116,871), பிலிப்பைன்ஸ் (115,980) மற்றும் கத்தார் (111,805) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT