உலகம்

பாகிஸ்தானில் குறைந்த கரோனா: செப். 15 முதல் கல்வி நிறுவனங்கள் திறப்பு

6th Aug 2020 04:33 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் புதிதாக 727 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,81,863 ஆக அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 727 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு 2,81,863 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரேநாளில் 21 பேர் உள்பட இறப்பு எண்ணிக்கை 6,035 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,56,058 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 19,770 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 121,373, பஞ்சாப் - 93,847, கைபர்-பக்துன்க்வா- 34,359, இஸ்லாமாபாத் - 15,141, பலுசிஸ்தான்- 11,793, கில்கித்-பல்திஸ்தான்- 2,234 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 15,001 மாதிரிகள் உள்பட இதுவரை 20,58,872 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும் பாகிஸ்தானில் வருகிற செப்டம்பர் 15 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் ஷப்காத் முகமது தெரிவித்துள்ளார். அதேபோன்று வரும் வாரத்தில் பூங்காக்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT