உலகம்

நியாயமான போட்டியில் சொல் வேறு செயல் வேறாக செயல்படும் அமெரிக்கா

6th Aug 2020 06:08 PM

ADVERTISEMENT

 

உலகளவில் டிக்டாக் எனும் விடியோ பகிர்வு செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில், செட்படம்பர் 15ஆம் தேதிக்கு முன்பாக அந்நிறுவனத்தின் அமெரிக்கிக் கிளையை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்றும் அப்படிச்  செய்யா விட்டால் அந்நிறுவனத்தினைக் கட்டாயமாக மூடிவிடுவோம் என்றும் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் சமீபத்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

எந்த ஆதாரமோ அல்லது எவ்விதக் காரணமோயின்றி தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அமெரிக்காவைச் சேராத  தொழில் நிறுவனங்களை அமெரிக்கா வீழ்த்தி வருகின்றது. முன்பு ஹுவாவெய் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இது போன்ற நிலைமை இன்று டிக்டாக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அது மட்டுமல்லாமல், வரலாற்றில் ஜப்பானின் தோஷிபா, பிரான்ஸின் அல்ஸ்டாம் உள்ளிட்ட நிறுவனங்களையும் அமெரிக்கா இதே முறையிலேயே வீழ்த்தியது. அமெரிக்காவின் செயல், சந்தைப் பொருளாதார விதிகளையும், உலக வர்த்தக அமைப்பின் திறப்பு மற்றும் வெளிப்படையான கொள்கைகளையும் மீறுவதாக உள்ளது. இது, அமெரிக்காவின் ஒடுக்குமுறைச் செயல் தானே தவிர வேறொன்றுமில்லை. 

அமெரிக்கா எப்போதும் எங்கும் பரப்பி வரும் நியாயமான போட்டி என்பது இப்பொழுது எங்கே போனது? என்னும் கேள்வி எழுகின்றது. உண்மையில், அமெரிக்கா பொருளாதார விஷயங்களை அரசியலாக்க முயல்கிறது.

எந்த ஆதாரமும்மின்றி தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பிற நாட்டின் தொழில் நிறுவனங்களை தடை செய்து அவற்றை வீழ்த்தும் அமெரிக்காவை போல, உலகின் எந்தவொரு நாடும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், அமெரிக்காவின் எந்த ஒரு நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT