உலகம்

அமெரிக்க அரசியல்வாதிகள் சூழ்ச்சிகளுடன் சீன எதிர்ப்புக் கருத்துகளை வெளியிடுகின்றனர்: ஸ்டீபென்

6th Aug 2020 04:31 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை ஆய்வாளர் ஸ்டீபென் எஸ் ரோச் 4ஆம் நாள் சிஎன்என் செய்தி இணையத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.  அதில், கடந்த ஒரு மாத காலமாக வெளியுறவு அமைச்சர் பாம்பியோ உள்ளிட்ட அமெரிக்காவின் 4 அரசு அதிகாரிகள் சீனாவுக்கு எதிரான கருத்துக்களை தந்திரத்துடன் வெளியிட்டு வந்துள்ளதாகவும், அவர்களின் கருத்துக்களில் பெரும்பாலானவை உண்மையின் அடிப்படையில் அன்றி சூழ்ச்சிகளுடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதாரம், கோவிட்-19 நோய் பரவலுக்கான பொறுப்பு, அமெரிக்க-சீன உறவு ஆகிய 3 துறைகளில் அவர்களின் தவறான கருத்துக்கள் வெளிகாட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பொருளாதாரக் கோணத்திலிருந்து பார்த்தால், அமெரிக்க நுகர்வோருக்கு சீனாவின் வணிகப் பொருட்கள் தேவை. அமெரிக்க நிதித்துறைக்கு சீனாவின் அமெரிக்க கடன் கையிருப்பு தேவை. அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு சீனாவின் சந்தை தேவை. சுருக்கமாகக் கூறினால், அமெரிக்கா-சீனா இவ்விரு நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உறவைக் கொண்டுள்ளன. இச்சூழலில் இரு நாடுகளுக்கிடையிலான இத்தகைய உறவு மோசமானால் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும்  அந்தக் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT