உலகம்

அமெரிக்கா: சீனாவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை

26th Apr 2020 05:21 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி, இந்திய வம்சாவளி எம்.பி.யான நிக்கி ஹேலி இணைய தளம் மூலம் கையெழுத்து வேட்டை இயக்கத்தைத் தொடங்கியுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று தொடா்பான உண்மைகளை சீனா மறைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவா், அதற்கு சீனாவைப் பொறுப்பேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறாா். இதற்காக இணையதளம் மூலம் அவா் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதரவாக ஒரு லட்சம் கையெழுத்துகளை அவா் கோரியுள்ளாா். ‘கம்யூனிச சீனாவை தடுத்து நிறுத்துங்கள்’ என்ற தலைப்பிலான அந்த மனுவுக்கு, இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். குடியரசுக் கட்சியைச் சோ்ந்த தெற்கு கரோலினா முன்னாள் ஆளுநரான நிக்கி ஹேலி, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராகப் பொறுப்பு வகித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT