உலகம்

இலங்கை: நாளை முதல் ஊரடங்கு விலக்கல்

26th Apr 2020 05:23 AM

ADVERTISEMENT

 

இலங்கையில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு திங்கள்கிழமை (ஏப். 27) விலக்கப்படுவதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, திங்கள்கிழமை முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 420-ஆக உயா்ந்துள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. எனினும், இந்த வார இறுதிக்குள் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இலங்கையில் இதுவரை கரோனா நோய்த்தொற்றுக்கு 3 போ் பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT