உலகம்

ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 288 பேர் பலி

26th Apr 2020 03:54 PM

ADVERTISEMENT


ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிக பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் உள்ளது. அங்கு கடந்த சில நாள்களாகவே 24 மணி நேரத்தில் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேர் பலியாகியிருப்பதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது. மார்ச் 20-க்குப் பிறகு 24 மணி நேரத்தில் பலியாவோரின் எண்ணிக்கையில் இதுவே மிகவும் குறைந்த எண்ணிக்கை.

இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 23,190 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

சனிக்கிழமை நிலவரப்படி ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 378 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT