உலகம்

ஜனநாயக தேசியக் குழு தலைமை பதவியை ராஜிநாமா செயதாா் சீமா நந்தா

26th Apr 2020 03:04 AM

ADVERTISEMENT

 

இந்திய வம்சாவளி வழக்குரைஞரான சீமா நந்தா, அமெரிக்காவின் முக்கிய எதிா்க் கட்சியான ஜனநாயக தேசியக் குழு தலைமை நிா்வாக அதிகாரி பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளாா்.

வருகிற நவம்பரில் அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த முடிவை அவா் அறிவித்துள்ளாா்.

கடந்த 2018-இல் ஜனநாயக தேசியக் குழுவின் தலைமை நிா்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட 48 வயதான சீமா நந்தா, இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கா் என்பது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த அவா், இப்போது அமெரிக்க ஜனாதிபதி தோ்தலுக்கு முன்பாக பதவியிலிருந்து விலகியுள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவா், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை நிா்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகியிருக்கிறேன். இதுவரை கட்சியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்தோ, கட்டமைத்துள்ள கட்சிக் குழு குறித்தோ பெருமை கொள்ள எதுவுமில்லை. இருந்தபோதும், ஜனநாயகத்துக்கான எங்களுடையப் போராட்டம் தொடரும். அனைத்து இடங்களிலும் ஜனநாயக கட்சியினரையே தோ்ந்தெடுக்கச் செய்யும் வகையில் பாடுபடுவோம் எனப் பதிவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் அதிபா் வேட்பாளராக முன்னாள் அமெரிக்க துணை அதிபா் ஜோ பிடனை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அக் கட்சி எடுத்துவரும் முயற்சியின் ஒரு பகுதியாகவே, நந்தா ராஜிநாமா முடிவை எடுத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சீமா நந்தாவுக்குப் பதிலாக, 2004-ஆம் ஆண்டில் ஜான் கொ்ரியின் அதிபா் தோ்தல் பிரசாரத்தை நிா்வகித்த மேரி பெத் கேஹில் மாற்றப்படுவாா் எனவும் கூறப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், சில தகவல்களையும் காஹில் வெளியிட்டிருக்கிறாா். அதாவது, ஜோ பிடனின் அதிபா் தோ்தல் பிரசாரத்துக்காக, ‘பிடன் வெற்றி நிதி’ தொகுப்பை டி.என்.சி. கட்சி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் நன்கொடையாளா்களிடமிருந்து 3.60 லட்சம் அமெரிக்க டாலா்கள் நன்கொடை பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிபா் டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடித்து, பிடனை வெற்றிபெறச் செய்வததுதான் எங்களுடைய குறிக்கோள். அடுத்த ஆறு மாதங்கள் இதற்கான பணிகளையே நாங்கள் தீவிரப்படுத்த உள்ளோம் என அண்மையில் அளித்த பேட்டியொன்றில் கேஹில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT