உலகம்

கரோனா நோய்த் தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்புப் பணியில் சீன மக்களின் அர்ப்பணிப்பு உணர்வு

26th Apr 2020 12:43 PM

ADVERTISEMENT

 

கடந்த சில ஆண்டுகளாக  சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்,  “சிச்சியன்”  என்ற குறிக்கோளை பலமுறை குறிப்பிட்டுள்ளார். ஆனால், “சிச்சியன் குறிக்கோள்“  என்ன?  சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு, கடந்த 50ஆம் ஆண்டுகள் முதல், மேற்குப் பகுதியின் பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் விதமாக, புகழ்பெற்ற போக்குவரத்து பல்கலைக்கழம் வசதியான ஷாங்காயில் இருந்து கடின நிலையில் இருந்த சிஆன் நகருக்கு இடம் பெயர்ந்துள்ளது.

அப்போது, இத்திட்டத்தற்காக, 1,400க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கிட்டத்தட்ட 3000 மாணவர்களும் சி ஆன் நகருக்கு சென்றனர். முழுமூச்சுடன் முயற்சி எடுத்து, முன்னேறிச் செல்லும் சீன மக்கள், சீனாவுக்கு மிக மதிப்புள்ள செல்வாகும் என்று முன்னாள் பிரான்ஸ் தலைமையமைச்சர் ஜியன் பீயேர் ரஃப்பாரின் பாராட்டினார்.  எனவே, “சிச்சியன் குறிக்கோள்” என்பதில், தேசத்தை நேசிக்கும் உணர்வு, பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை உள்ளடக்கம். கடந்த பத்து ஆண்டுகளில், சீனா விரைவான வளர்ச்சியை நனவாக்கும் ஊற்றுமூல  சக்தியாக   இது திகழ்கிறது. இன்று கரோனா நோய் தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் இந்த குறிக்கோளுக்கு, கால ஓட்டத்திற்கு ஏற்ப புதிய அம்சங்களை ஊட்டப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்புப் போராட்டத்திலும், இந்த குறிக்கோள், மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.  தற்போது, கரோனா வைரஸ் உலகளவில் பரவி வருகிறது. இது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மேற்கு இந்தக் குறிக்கோளை மீண்டும் குறிப்பிட்டுள்ளார் என்பது வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது. கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் இடைவிடாமல் ஈடுபட்டு, இறுதியில், இத்தொற்று நோயை வெற்றிகரமாகச் சமாளித்த சீன மக்களுக்கு இது ஊக்கமளித்துள்ளது. மேலும், இவ்வாண்டின் வளர்ச்சி இலக்குளை சீனா திட்டப்படியே நனவாக்குவதற்கும் இது துணை புரியும். குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்குவது என்ற உன்னத குறிக்கோளை முற்றிலும் நனவாக்குவதற்கும் வழிவகை செய்யும். 

ADVERTISEMENT

தகவல் : சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT