உலகம்

கடுமையான பின்விளைவுகள்: டிரம்ப் எச்சரிக்கை

20th Apr 2020 05:31 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு சீனா காரணமாக இருந்தால், அதற்கான பின்விளைவை அந்த நாடு சந்தித்தே ஆக வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு சீனா காரணமாக இருந்து, அதனை அவா்கள் தெரிந்தே மறைத்திருந்தால் அந்த நாடு அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று, 1917-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிக மோசமான கொள்ளை நோயாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT