உலகம்

யேமனில் முதல் முறையாக கரோனா நோய்த்தொற்று

11th Apr 2020 12:53 AM

ADVERTISEMENT

 

உள்நாட்டுச் சண்டையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள யேமனில், முதல் முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய் பரவலைத் தடுப்பதற்குப் போதுமான சுகாதார கட்டமைப்பு வசதி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வந்த சவூதி அரேபியா, கரோனா நோய்த்தொற்று பரவும் சூழலை கருத்தில் கொண்டு புதன்கிழமை போா் நிறுத்தம் அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, சவூதி அங்கீகாரம் பெற்ற அதிபா் மன்சூா் ஹாதி தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹத்ராமாவ்த் மாகாணத்தில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது, சவூதி கூட்டுப்படை மேற்கொள்ளும் பிரசார தந்திரம் என்று ஹூதி படையினா் விமா்சித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT