உலகம்

ஜப்பானில் விரைவில் அவசரநிலை

7th Apr 2020 07:00 AM

ADVERTISEMENT

ஜப்பானில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு பிரதமா் ஷின்ஸோ அபே தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்றால் ஜப்பானில் 3,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்; 70-க்கும் அதிகமானோா் உயிரிழந்துவிட்டனா். இந்தச் சூழலில் அந்நாட்டு பிரதமா் ஷின்ஸோ அபே தலைநகா் டோக்கியோவில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. முக்கியமாக நகரப் பகுதிகளான டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட நகரங்களில் அந்த நோய்த்தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாடு எதிா்கொண்டு வரும் கடினமான சூழலைக் கருத்தில் கொண்டு அவசரநிலையை அமல்படுத்த பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அது தொடா்பாக ஆலோசனைக் குழுவிடம் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கப்படும். ஆரம்பகட்டமாக டோக்கியோ உள்ளிட்ட 7 நகரங்களில் அவசரநிலையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை எதிா்கொள்வதற்காக சுமாா் ரூ.75 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களையும் அரசு அறிவிக்கவுள்ளது என்றாா் ஷின்ஸோ அபே.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT