உலகம்

கரோனா: நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான பன்னாட்டு ஒத்துழைப்பை முன்னேற்றி வரும் சீனா

7th Apr 2020 06:21 PM

ADVERTISEMENT

 

உலகில் புதிய ரக கரோனா வைரஸ் ஏற்பட்ட பின், சீனா வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும், இத்தொற்று நோய் பற்றிய தகவல்களை வெளியிட்டு, உலகச் சுகாதார அமைப்பு மற்றும் பன்னாட்டு சமூகத்துடன் நோய் தடுப்பு மற்றும் கட்டுபாடு, மருத்துவச் சிகிச்சை தொடர்பான அனுபவங்களையும் முழுமையாகப் பகிர்ந்து கொண்டு வருகிறதது.

மேலும், நோய்க்கு எதிரான ஆய்வு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இயன்ற அளவில் பல்வேறு தரப்புகளுக்கு உதவி அளிக்கவும் சீனா செயல்பட்டு வருகிறது.

2019ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களின் இறுதியில், ஹுபெய் மாநிலத் தலைநகர் வூஹானிலுள்ள நோய்க் கட்டுபாட்டு மையம், காரணம் தெரியாமல் ஏற்பட்ட நுரையீரல் அழற்சி நோயாளிகளைக் கண்டறிந்தது.

ADVERTISEMENT

2020 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் நாள் முதல், உலகச் சுகாதார அமைப்பு, தொடர்புடைய நாடுகள் மற்றும் பிரதேச அமைப்புகள், சீனாவின் ஹாங்காங், மக்கெள மற்றும் தைவான் ஆகியனவற்றிற்குச் சீனா கால தாமதமின்றியும் முன்முயற்சியுடனும், அந்த நோய் பற்றிய தகவல்களை அனுப்பியது.

மேலும், அந்த நோய் குறித்த தகவல்களையும் இந்நோய்க்கு எதிராக சீனா மேற்கொண்டுள்ள தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளையும் சீனா முறையான முறையில் அமெரிக்காவுக்குத் தெரிவிக்க துவங்கியது.

ஜனவரி 4-ஆம் நாள் முதல், சீன நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளர், அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரினைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்நோய் பற்றிய நிலைமையை தெரிவித்தார். அப்போது, தகவல் தொடர்பு, தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றில் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

ஜனவரி 5-ஆம் நாள் சீனாவின் வூஹான் நகரில் காரணம் தெரியாமல் ஏற்பட்ட நுழையீரல் அழற்சி நோய் தொடர்பாக, உலகச் சுகாதார அமைப்பு முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜனவரி 7-ஆம் நாள், அந்த நோய்க்குக் காரணமான வைரசை உறுதிப்படுத்தி, தொடர்புடைய சிகிச்சைகளை அளிக்கும் வகையில், சீன நோய்க் கட்டுப்பாட்டு மையம், புதிய ரக கரோனா வைரஸின் முதலாவது திரிபினை வெற்றிகரமாக பெற்றது.

ஜனவரி 8-ஆம் நாள், சீனா மற்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையங்களின் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தொழில் நுட்பப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதம் நடத்தினர்.

ஜனவரி 9-ஆம் நாள் வூஹான் நகரில் காரணம் தெரியாமல் ஏற்பட்ட நுழையீரல் அழற்சி நோய்க்குக் காரணமான வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது பற்றிய ஆய்வுத் தகவலைச் சீனச் சுகாதார ஆணையத்தின் நிபுணர்கள் குழு வெளியிட்டது. இத்தொற்று நோய்க்குக் காரணமான வைரஸ், புதிய ரக கரோனா வைரஸ் தான் என்பது உறுதிபடுத்தப்பட்டது. மேலும், இவ்வைரஸை உறுதிப்படுத்தும் பணியில் பெறப்பட்ட அடிப்படைத் தகவல்கள் மற்றும் ஆய்வுச் சாதனைகளைச் சீனா உலகச் சுகாதார அமைப்புக்கு பகிர்ந்து கொண்டது.

ஜனவரி 12-ஆம் நாள் வூஹான் மாநகராட்சி சுகாதார ஆணையம் நோய் பற்றிய அறிக்கையை வெளியிட்டபோது, காரணம் தெரியாத நுழையீரல் அழற்சி நோய் என்பதை மாற்றி புதிய ரக கரோனா வைரஸால் ஏற்பட்ட நுழையீரல் அழற்சி என முதன்முறையாக அழைத்தது.

மேலும், சீனா, உலகச் சுகாதார அமைப்பிடம் புதிய ரக கரோனா வைரசின் மரபணு தொகுதித் தகவல்களை வழங்கியது. அதோடு, நோயுடன் தொடர்புடைய தகவல்களை, அனைத்து சளிக்காய்ச்சல் தகவல்களுக்கான உலகப் பகிர்வு தரவுத் தளத்துக்கு சீனா அனுப்பியது.

ஜனவரி 19-ஆம் நாள், தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து, அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் சீன நோய்க் கட்டுப்பாட்டு மையத்துடன் பரிமாறிக் கொண்டது.

ஜனவரி 21-ஆம் நாள், 2020ஆம் ஆண்டின் ஜனவரி 20, 21ஆகிய இரு நாட்களில், உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, சீனாவின் வூஹான் நகரில் களஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அவ்வமைப்பு தனது இணையதளத்தின் வழி அறிவித்தது.

ஜனவரி 23-ஆம் நாள், வூஹான் நகரிலுள்ள தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுத் தலைமையகம், 1-ஆம் இலக்கம் என்ற அறிக்கையை வெளியிட்டு, ஜனவரி 23-ஆம் நாள் 10 மணி முதல், வூஹான் நகரிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் தொடர் வண்டி நிலையங்களிலிருந்து வெளியேறும் அனைத்தும் பயணச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. அதோடு, சீன போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட அவரச அறிக்கை ஒன்றில், சீனா முழுவதிலும் இருந்து வூஹான் நகருக்குச் செல்லும் பயணியர் போக்குவரத்துச் சேவை அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 25-ஆம் நாள், சீன நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தலைமையில், சீனாவின் பல மருத்துவமனைகளும் ஆய்வு நிறுவனங்களும், “2019ஆம் ஆண்டு சீன நுரையீரல் அழற்சி நோயாளிகளின் புதிய ரக கரோனா வரைஸ்”என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டன. முழுமையான மரபணுக்களின் தொகுதியைப் பரிசோதனை செய்ததன் மூலம், இது வரை காணாத பி ரக கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது, மனிதரைத் தொற்றி கொள்ளக் கூடிய கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த 7ஆவது வைரஸ் என்று இவ்வாய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 27-ஆம் நாள், சீனச் சுகாதார ஆணையத்தின் தலைவர் மா சியெள வெய், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, அமெரிக்கச் சுகாதார மற்றும் பொது சேவைத் துறைஅமைச்சர் அசாருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

ஜனவரி 28-ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸைப் பெய்ஜிங்கில் சந்தித்து உரையாடினார்.

ஜனவரி 30ஆம் நாள், அமெரிக்கா, உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழுவில் சேர்வதைச் சீனச் சுகாதார ஆணையம் அதிகாரப்பூர்வ வழி மூலம் வரவேற்றது. இதற்காக அமெரிக்கா அதே நாள் பதில் அளித்து சீனாவுக்கு நன்றி தெரிவித்தது.

பிப்ரவரி 3-ஆம் நாள், பிப்ரவரி 3-ஆம் நாள் வரை, இத்தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைச் சீனா அமெரிக்காவுக்கு மொத்தமாக 30 முறைகளாக தெரிவித்துள்ளது. சீனத் தரப்பின் மருத்துவச் சிகிச்சை வழிமுறைகள், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சீனா பல்வேறு நாடுகளுடன் இணைந்து நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்கபாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான கிடங்கின் இணைப்புகள் போன்றவை குறித்து, சீனாவிலுள்ள அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையத்தின் பிரிவுத் தலைவருடன் சீனா நிகழ்நேரத்தில் வழங்கியுள்ளது.

பிப்ரவரி 4-ஆம் நாள், சீன நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையத்தின் பொறுப்பாளர், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, அமெரிக்கத் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவருடன் தொலைபேசி மூலம், இத்தொற்றுநோயின் நிலைமை குறித்து பரிமாற்றம் மேற்கொண்டார்.

பிப்ரவரி 7-ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.

பிப்ரவர் 8-ஆம் நாள், அமெரிக்க நிபுணர்கள் சீன - உலகச் சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்த பன்னாட்டு நிபுணர்கள் குழுவில் பங்கெடுப்பது குறித்து சீனா மற்றும் அமெரிக்க சுகாதார அமைச்சகங்களின் பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டனர்.

பிப்ரவரி 11-ஆம் நாள், சீன நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர்களும், அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த காய்ச்சல் பிரிவின் நிபுணர்களும், காணொலி கூட்டம் ஒன்றை நடத்தி, இத்தொற்றுநோயின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலைமை குறித்து பரிமாற்றம் மேற்கொண்டனர்.

பிப்ரவரி 12-ஆம் நாள், அமெரிக்கச் சுகாதார மற்றும் பொதுச் சேவை அமைச்சகத்தின் தொடர்புடைய அதிகாரி ஒருவர், சீனச் சுகாதார ஆணையத்தின் பொறுப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தொடர்பு கொண்டார்.

பிப்ரவரி 14-ஆம் நாள், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசியப் பொருளாதாரக் குழுத் தலைவர் குட்லோவ், சீன அரசு இத்தொற்று நோயைச் சமாளிக்கும் வெளிப்படைத் தன்மை குறைவு என்ற கூற்றை வெளியிட்டார். இது குறித்து, உலகச் சுகாதார அமைப்பின் சுகாதார அவசர திட்டத் துறைப் பொறுப்பாளர் மைக்கேல் ஜே ரியான் கூறுகையில், சீன அரசு ஆக்கப்பூர்வமாக உலகச் சுகாதார அமைப்புடன் ஒத்துழைத்து, உயர்ந்த வெளிப்படைத் தன்மையைக் காட்டுவதாகக் கருத்து தெரிவித்தார்.

பிப்ரவரி 16-ஆம் நாள், சீனா மற்றும் உலகச் சுகாதார அமைப்பின் பன்னாட்டு நிபுணர்கள் குழு, சீனாவில் 9 நாட்கள் நீடித்த ஆய்வைத் துவங்கியது. பெய்ஜிங், செங்து, குவாங்சோ, ஷென்சென், வூஹான் முதலிய நகரங்களில் அவர்கள் முறையே களஆய்வு செய்தனர்.

பிப்ரவரி 18-ஆம் நாள், சீனச் சுகாதார ஆணையம், அமெரிக்க சுகாதார மற்றும் பொதுச் சேவை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி, இரு தரப்பும் சுகாதார மற்றும் தொற்று நோய்த் தடுப்பு தொடர்பாக ஒத்துழைப்பது குறித்து மேலதிகத் தொடர்புகளை மேற்கொண்டது.

பிப்ரவரி 19-ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்காவின் கேட்ஸ் நிதியத்தின் இணைத் தலைவர் பில் கேட்சுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, சீனாவில் தொற்று நோய்க்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிக்கு கேட்ஸ் நிதியம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு, சர்வதேச சமூகம் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, தொற்று நோயைக் கூட்டாகச் சமாளிக்க வேணடும் என்றும் ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.

பிப்ரவரி 24-ஆம் நாள், சீன - உலகச் சுகாதார அமைப்பின் பன்னாட்டு நிபுணர்கள் குழு, பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுச் சுகாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் வரலாறு காணாத அளவிலான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சீனா மேற்கொண்டு வருகின்றது என்றும், இத்தொற்று நோய் பரவல் வேகத்தைக் குறைத்து, வைரஸ் மனிதர்களுக்கிடையே பரவலைத் தடுப்பதில் இது தெளிவான சாதனைகளைப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தனர். அதோடு, இவ்வைரஸால் புதிதாகப் பாதிக்கப்படவிருந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்படவிருந்த நிலைமையை இந்த தடுப்பு மற்றும் கட்டுபாட்டு நடவடிக்கைகள் தவிர்த்தது அல்லது தள்ளிப்போட்டது என்றும் கருத்து தெரிவித்தனர்.

பிப்ரவரி 28-ஆம் நாள், சீனப் பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞர் ட்சோங் நான்ஷான் தலைமையிலான ஆய்வுக் குழு உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து, அமெரிக்காவின் புதிய இங்கிலாந்து மருத்துவவியல் இதழில், “புதிய ரக கரோனா வைரஸால் ஏற்பட்ட நுழையீரல் அழற்சியின் மருத்துவ அறிகுறிகள்”என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டன. இக்கட்டுரையில், இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட 1099 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்புடைய தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

மார்ச் 11-ஆம் நாள், சீன நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வுக் குழு, அமெரிக்க மருத்துவக் கழகத்தின் இதழில், “வேறுபட்ட வகைகளிலான மருத்துவ மாதிரிகளில் SARS-CoV-2க்கான பரிசோதனை என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. இக்கட்டுரையில், புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஏற்பட்ட உயிரணுக்கள் மாற்றங்கள் ஆய்வு நோக்கில் விவரிக்கப்பட்டன.

மார்ச் 12-ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஐ.நா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அப்போது, சீனா தொடர்புடைய நாடுகளுடன் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, மருந்துகள் மற்றும் தடுப்பூசி குறித்து கூட்டு ஆய்வு நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், இவ்வைரசால் பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்குச் சீனா இயன்ற அளவில் உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், அப்போது சீனா அனுப்பிய முதலாவது மருத்துவ நிபுணர்கள் குழு மருத்துவப் பொருட்களுடன் இணைந்து இத்தாலி சென்றடைந்தது.

மார்ச் 17-ஆம் நாள், சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள, 14 வகையான சோதனை மருந்துகள் 11 நாடுகளுக்கு விநியோகிப்பட்டுள்ளன.

மார்ச் 26-ஆம் நாள், புதிய ரக கரோனா வைரசைச் சமாளிக்க ஜி-20 அமைப்பு நடத்திய சிறப்பு உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், “கையோடு கைகோர்த்து வைரஸை எதிர்த்து கூட்டாக இன்னலைச் சமாளிப்பது” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

சீனத் தேசிய சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, மார்ச் 26-ஆம் நாள் வரை, 89 நாடுகளுக்கும் 4 சர்வதேச அமைப்புகளுக்கும் சீனா 4 தொகுதி உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போது 5 ஆவது தொகுதி உதவித் திட்டம் வகுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

மார்ச் 27-ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.

மார்ச் 29-ஆம் நாள், சீன அரசவை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீனாவில் பரவிய புதிய ரக கரோனா வைரஸ் நோய் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 30-ஆம் நாள், அமெரிக்க மார்பக மருத்துவர்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று, சீன மருத்துவ நிபுணர்கள், அமெரிக்க மருத்துவர்களுடன் கூட்டாக “புதிய ரக கரோனா வைரஸைச் சமாளிக்கும் இணையக் கருத்தரங்கு”என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சீனாவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சீனச் சுகாதார ஆணையத் தலைவர் மா சியெளவெய்,அமெரிக்கச் சுகாதார மற்றும் பொது சேவைத் துறை அமைச்சர் அசாரினைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மார்ச் 27-ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது உரையாடிய அம்சங்களை நடைமுறைப்படுத்துவது, சீனாவின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, அடுத்த கட்ட ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர்.

மார்ச் 31-ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், மார்ச் 31-ஆம் நாள் வரை, சீன அரசு 120 நாடுகளுக்கும் 4 சர்வதேச அமைப்புகளுக்கும், சாதாரண முகக் கவசங்கள், என்95 ரக முகக் கவசங்கள், பாதுகாப்பு கவச ஆடைகள், பரிசோதனை மருந்துகள், செயற்கை சுவாசக் கருவி போன்ற பொருட்களை வழங்கியுள்ளது. மேலும், சீனாவின் உள்ளாட்சி அரசுகள், நட்பு நகரங்கள் என்ற வழிமுறைகளில், 50க்கும் அதிகமான நாடுகளுக்கு, மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளன. சீனத் தொழில் நிறுவனங்கள், 100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT