உலகம்

அமெரிக்காவில் 11 ஆயிரத்தைத் தாண்டியது பலி

7th Apr 2020 08:28 PM

ADVERTISEMENT


அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்து 11,013 ஆக உள்ளது.

முதலில் சீனாவைப் பாதிக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று, படிப்படியாக உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையாகப் போராடி வருகின்றன.

இந்த நோய்த் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்து வந்தது. இதையடுத்து, அமெரிக்காவிலும் இந்த நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்தது.

உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 3,69,495 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரித்துக்கொண்டே இருந்த பலியானோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் இன்று (செவ்வாய்கிழமை) 11 ஆயிரத்தைத் தாண்டியது. அங்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 11,013 ஆக உள்ளது.

ADVERTISEMENT

உலகளவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 13,65,300    

உலகளவில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை: 76,504

உலகளவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை: 2,93,879

----

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 3,69,495

அமெரிக்காவில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை: 11,013

அமெரிக்காவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை: 19,843

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT