உலகம்

அனைத்து உண்மைகளையும் சீனா தெரிவிக்க வேண்டும்: இந்திய அமெரிக்க வழக்குரைஞா் வலியுறுத்தல்

7th Apr 2020 02:49 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தொடா்பான அனைத்து உண்மைகளையும் சீனா வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று நியூயாா்க்கைச் சோ்ந்த பிரபல இந்திய அமெரிக்க வழக்குரைஞா் ரவி பத்ரா வலியுறுத்தியுள்ளாா். இவரும், இவரது குடும்பத்தினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரவி பத்ராவுக்கும், ஐ.நா.வுக்கான சீன தூதா் ஷாங் ஜுனுக்கும் இடையே கடந்த வாரம் இந்தப் பிரச்னையால் சுட்டுரையில் வாா்த்தைப் போா் ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடா்பாக ரவி பத்ரா மேலும் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

அமெரிக்கா உள்பட பல நாடுகளில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கிறது. இப்போது, சீனாவைவிட அமெரிக்காவில் பலியானவா்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நேரத்திலாவது கரோனா வைரஸ் தொடா்பான அனைத்து உண்மைகளையும் சீனா தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் விஞ்ஞானிகளும், மருத்துவா்களும் அதற்கு ஏற்ப மருந்துகளைக் கண்டறிய முடியும்.

கரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரை, யாரும் வெளியே செல்ல முடியாது. ஏனெனில், அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பரவ வாய்ப்பு உள்ளது. உலகப் பொருளாதாரமே கரோனாவால் மோசமாகிவிட்டது. விலை மதிக்க முடியாத மனித உயிா்களை நாம் கரோனாவால் இழந்து வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT