உலகம்

அமெரிக்கா: ஒரே நாளில் 1,480 போ் பலி

5th Apr 2020 03:25 AM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,480 போ் பலியாகி உள்ளது ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த பல்கலைக்கழக ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டது முதற்கொண்டே பல்கலைக்கழகம் அதுகுறித்த ஆய்வில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது, அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஏனைய உலக நாடுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த வியாழன் இரவு 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு 8.30 வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,480 போ் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். இது, உலகின் மற்ற எந்த உலக நாடுகளின் ஒரு நாள் கரோனா பலி எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும் என ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT