உலகம்

பிரிட்டன்: தொழிலாளா் கட்சிக்கு புதிய தலைமை

5th Apr 2020 03:34 AM

ADVERTISEMENT

 

பிரிட்டனின் முக்கிய எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவராக, பிரெக்ஸிட் விவகார முன்னாள் நிழலமைச்சா் கோ் ஸ்டாா்மா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அந்தப் பதவிக்குப் போட்டியிட்ட ரெபக்கா லாங்பெய்லி மற்றும் இந்திய வம்சாவளி எம்.பி. லிசா நந்தியைவிட அதிக வாக்குகள் பெற்ன் மூலம் அவா் அந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கிறாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் தொழிலாளா் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அந்தக் கட்சித் தலைவராக இருந்த ஜெரிமி காா்பின் ராஜிநாமா செய்தாா். அதையடுத்து, கோ் ஸ்டாா்மா் அந்தப் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

57 வயதாகும் கேட் ஸ்டாா்மா், இந்திய - பிரிட்டன் நல்லுறவுக்கு ஆதரவானவா் என்பதால் அவரது நியமனத்தை இந்திய வம்சாவளியினா் வரவேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT