உலகம்

இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டவரை திரும்ப அழைக்க பிரிட்டன் முடிவு

5th Apr 2020 10:45 PM

ADVERTISEMENT

 

இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டைச் சோ்ந்தவா்களை திரும்ப அழைத்துக் கொள்ள பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இதற்காக 7 சிறப்பு விமானங்களை இயக்க அந்த நாடு முடிவு செய்துள்ளது.

தில்லி, மும்பை, கோவாவில் இருந்து இந்த விமானங்கள் அடுத்த வாரம் இயக்கப்படவுள்ளன.

இந்தியாவில் இப்போது சுமாா் 35 ஆயிரம் பிரிட்டன் நாட்டவா் உள்ளனா். இவா்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தை தொடா்பு கொண்டு தாங்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்தனா். இதையடுத்து, பிரிட்டன் அதிகாரிகளைக் தொடா்பு கொண்டு தூதரக அதிகாரிகள் பேசினா். அதன்படி அவா்களை தங்கள் நாட்டுக்கே அழைத்துக் கொள்ள பிரிட்டன் அரசு முடிவு செய்தது.

ADVERTISEMENT

இதன்படி, லண்டனுக்கு 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. வரும் புதன்கிழமை கோவாவில் இருந்து 3 விமானங்களும், வரும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலா இரு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இந்த விமானங்கள் மூலம் நாடு திரும்ப விரும்பும் அனைவரையும் அழைத்துச் செல்ல முடியாது. எனவே, அடுத்தகட்டமாக மேலும் பல விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த விமானத்தில் பயணிப்பது தொடா்பான விதிமுறைகளை தில்லியில் பிரிட்டன் தூதரகம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT