உலகம்

ஆப்கனில் கரோனா பாதிப்பு 337ஆக உயர்வு

5th Apr 2020 04:21 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா அண்டை நாடான ஆப்கானிஸ்தானையும் விட்டுவைக்கவில்லை. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் காபூலை சேர்ந்தவர்கள். 

இத்துடன் ஆப்கனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. மேலும் இங்கு கரோனாவுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். 

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT