உலகம்

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேர் பலி

5th Apr 2020 04:21 PM

ADVERTISEMENT

 

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 151 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,603 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,226 ஆக உள்ளது. சுமார் 19,736 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இத்தகவலை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தெரிவித்தார். 

ஈரானில் மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்று, கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. மேற்கு தெஹ்ரானில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள மாலில் வென்டிலேட்டர்கள், சுகாதார கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT