உலகம்

கரோனா: பாரிஸில் இருந்து 36 பேரை வெளியேற்றும் பிரான்ஸ்

1st Apr 2020 05:45 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்த 36 பேரைத் தலைநகர் பாரிஸ் பகுதியிலிருந்து ரயில் மூலம் பிற பகுதிகளுக்கு வெளியேற்றுகிறது பிரான்ஸ்.

பாரிஸ் பகுதியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 36 பேரை மருத்துவ வசதி கொண்ட இரு அதிவேக ரயில்கள் மூலம் பிரிட்டானியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் முயற்சியில் பிரான்ஸ் இறங்கியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிரிட்டானி நகர் இருக்கும் மேற்கு பிரான்ஸ் பகுதி அவ்வளவாக பாதிக்கப்படாத காரணத்தினால் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொண்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 52,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 3,523 ஆக உள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT