உலகம்

சீனாவால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்

22nd Sep 2019 01:18 AM

ADVERTISEMENT

சீனாவால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிக வேகத்தில் சீனா தனது ராணுவ வலிமையை அதிகரித்து வருகிறது. அதற்காக, அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்வதன் மூலம் கிடைக்கும் நிதியை சீனா பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வகையில் உலகின் பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பு வர்த்தகம் மூலம் சீனாவுக்கு ஆண்டுதோறும் 50,000 கோடி டாலரை (சுமார் ரூ.35.6 லட்சம் கோடி) முந்தைய அரசுகள் வாரி வழங்கி வந்தன.
மேலும், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடவும் முந்தைய அதிபர்கள் அனுமதித்து வந்தனர் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT