உலகம்

ஹாங்காங்கில் 16-ஆவது வாரமாக தீவிர போராட்டம்

22nd Sep 2019 01:19 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் 16-ஆவது வாரமாக சனிக்கிழமையும் தொடர்ந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதாவை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்த பின்னரும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வார இறுதி நாளான சனிக்கிழமை ஹாங்காங்கின் பல்வேறு இடங்களில் ஏராளமானவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டக்களால் சுட்டும் போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டினர்.
போராட்டக்காரர்களில் சிலரும் போலீஸார் மீது கற்களை வீசினர். ஒரு பெட்ரோல் குண்டும் போலீஸாரை நோக்கி வீசப்பட்டது.
அரசுக் கட்டடமொன்றில் பறந்து கொண்டிருந்த சீன தேசியக் கொடியை போராட்டக் குழுவினர் கழற்றி எரித்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, போராட்டக்காரர்களுக்கு எதிராக ஹாங்காங் போலீஸார் அடக்குமுறையைக் கையாள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT