உலகம்

பிரதமர் மோடி தலைமையில் 17 எரிசக்தி நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

22nd Sep 2019 11:42 AM

ADVERTISEMENT

 

7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஹூஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 17 உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடனான வட்டமேசை விவாதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்த நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிகர மதிப்பு சுமார் 150 நாடுகளைச் சேர்த்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தியாவுடன் ஏதேனும் ஒரு தொடர்புடன் இயங்கி வருபவையாகும்.

ADVERTISEMENT

எரிசக்தி கூட்டாட்சியின் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இக்கூட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. இந்த கூட்டத்துக்கு ஆதரவாக ஒத்துழைத்த அரசாங்கத்துக்கு அதில் பங்கேற்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

இதில், ட்ரிஃப்ட்வுட் நிறுவனத்துடன் பங்கு முதலீடு மூலம் டெல்லூரியன் & பெட்ரோனெட் 5 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இரு நிறுவனங்களும் 2020 மார்ச் 31-ஆம் தேதி வரை ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்தியாவில் தங்கள் கால்தடத்தை மேம்படுத்துவது பற்றி பேசினர். ஈஸி ஆஃப் டூயிங் பிசினஸை நோக்கிய அரசாங்கத்தின் முயற்சிகள், இத்துறையில் கட்டுப்பாடு நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளை ஆதரித்தன மற்றும் இந்திய பொருளாதாரத்தில் உற்சாகமாக இருந்தன.

இதுகுறித்து எமர்ஸன் எலக்டிரிக் கோ நிறுவனத் தலைவர் மைக் டிரெய்ன் கூறுகையில், 

இக்கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியாகவும், கௌரவமாகவும் உள்ளது. பிரதமர் மோடி தனது கண்ணோட்டத்தை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்தியாவுக்கு சீரான அணுகுமுறையுடன், நிலையான வழியில் ஆற்றலைக் கொண்டு வர விரும்புகிறார்.

நாங்கள் இந்திய சந்தையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி இருக்கிறோம். 'இந்திய முதலீடு' மூலம் நாங்கள் செய்த பணிகளை நான் சுட்டிக்காட்டி பட்டியலிட்டேன். புணேயில் நாங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளோம். அதற்கான பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT