மோடி நலமா? நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பு

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றது முதல், அமெரிக்காவில் இந்திய சமூகத்தினரிடையே மோடி உரையாற்றவிருப்பது இது 3-ஆவது முறையாகும்.
மோடி நலமா? நிகழ்ச்சி
மோடி நலமா? நிகழ்ச்சி

அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி காலை பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். 

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் செப்டம்பர் 22-ஆம் தேதி மோடி உரையாற்றுகிறார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு ஹூஸ்டனில் உள்ள இந்திய-அமெரிக்கர்கள் முஸ்லிம் அசோசியேஷன் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா இடையிலான நல்லுறவின் அடிப்படையில் டிரம்ப் கலந்துகொள்வதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றது முதல், அமெரிக்காவில் இந்திய சமூகத்தினரிடையே மோடி உரையாற்றவிருப்பது இது 3-ஆவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com